தாளவாடி அருகே கர்நாடக மதுபானம் பறிமுதல்:விற்றவர் தலைமறைவு

தாளவாடி அருகே கர்நாடக மதுபானம் பறிமுதல்:விற்றவர் தலைமறைவு

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்

தாளவாடி அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கர்நாடக மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காமையன்புரம் கிராமத்தில் கர்நாடக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தாளவாடி காவல் துறையினர்க்கு கிடைத்தது.

இதனை அடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது வெங்கட்ராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக கர்நாடகா மது பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓடினார்.

இதனையடுத்து கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story