சிற்றார் அணையில் வள்ளக்கடவு பகுதியில் கேரளா வாலிபர் பிணமாக மீட்பு

சிற்றார் அணையில் வள்ளக்கடவு பகுதியில் கேரளா வாலிபர் பிணமாக மீட்பு

பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணையில் வள்ளக்கடவு பகுதியில் கேரளா வாலிபர் பிணமாக மீட்கப்ட்டுள்ளது.

தமிழக கேரளா எல்லை பகுதியான நெட்டா பகுதியில் சிற்றார் அணை அமைந்துள்ளது.இந்த அணையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

இந்த அணையில் நீச்சல் தெரியாத பலரும் மூழ்கி உயிரிழந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடைய இன்று காலை வள்ளக்கடவு பகுதியில் வாலிபர் ஒருவர் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் களியல் போலீசாருக்கும் தீயணைப்பு துறை இருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அணையில் நீரில் பிணமாக மிதந்த வாலிபர் உடலை மீட்டனர் பின்னர்.பிரேத பரிசோதனைக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்த வாலிபர் கேரள மாநிலம் ஆரியநாடு பகுதியை சேர்ந்த ஷனேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து களியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story