பெண் உட்பட 3 பேரை கடத்தி கொள்ளை - 5 பேர் கைது

பெண் உட்பட 3 பேரை  கடத்தி கொள்ளை - 5 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

காங்கேயம் அருகே பெண் உட்பட மூன்று பேரை காரில் கடத்தி நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலூக்கா மல்லசமுத்திரத்தை சேர்ந்த கலா, இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கலாவிற்கு தொழில் ரீதியாக பரமத்திவேலூரை சேர்ந்த சுதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுதா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவரை கலாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி ஜெகதீசன் பழனி அருகே தொழில் ரீதியாக இடத்தை பார்வையிட கலாவை நேரில் வர அழைத்துள்ளார்.

இதனை நம்பி கலாவும் அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிரைவர் கார்த்திக் உடன் அவருக்கு சொந்தமான காரில் ரூ.5 லட்சத்துடன் புறப்பட்டுள்ளார். அன்று இரவு ஈரோடு பழனி சாலை காங்கேயம் வழியாக சென்று கொண்டிருந்தனர். இரவு 12:00 மணியளவில் மற்றொரு காரில் வந்த கும்பல், கலா வந்த காரை மறித்து கலா, கிருஷ்ணமூர்த்தி டிரைவர் கார்த்திகேயன் ஆகியோரலை மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். காங்கேயம் அடுத்த படியூர் பகுதியில் இந்தராணி என்பர் ஒரு வீட்டில் ஒரு நாள் முழுக்க அடைத்து வைத்துள்ளார்.

அங்கு கலாவிடமிருந்து 5 லட்சம் பணம் எட்டு பவுன் சங்கிலி பறித்துக்கொண்டு, காங்கேயம் அடுத்துள்ள கொடுவாய் அருகே கண்களை கட்டி கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதை யாருடனும் சொல்ல கூடாது என்று மிரட்டி சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற கலா மற்றும் அவரும் நண்பர்கள் கடத்தல் பற்றி இதுவரை சொல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கலாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது மகன் கேட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து எடுத்து கலா மற்றும் அவரது மகன் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடினர்.

இதில் சுதா ,இந்திராணி ஆகிய இருவரை நேற்று முன்தினம் இரவு கைதுசெய்த நிலையில் நேற்று திருப்பூர் வீரபாண்டி கார்த்திகேயன்,35, திருப்பூர் பெருந்தொழுவு சந்தோஷ்,34, பாண்டிதுரை,39, ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நேற்று இரவு 11 மணி அளவில் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story