ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே உள்ள வரகூரை சேர்ந்தவர் மதியழகன் மகன் மணி வயது 35 இவர் கூலி வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10. 30 மணி அளவில் வரகூர் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது ஏரியின் நடுவே சென்றவர் மீண்டும் திரும்ப கரைக்கு வருவதற்கு முயன்றவர் அவரால் வர முடியாமல் தத்தளித்து உள்ளார். அங்கிருந்து சத்தம் போட்டார். அலறல் குரலை கேட்டு அருகே 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த அவரது அம்மா சம்பூர்ணம் மற்றும் அவரது மனைவி கவிதா வயது 32 ஆகியோர் காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால் முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உதவி உடன் நீரில் மூழ்கிய நபரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இறந்த மணிக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Tags

Next Story