தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
மணிகண்டன்
திருவட்டார் அருகே பைக்கில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற தொழிலாளி உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஸ்ரீஜாவின் பெற்றோர் வீடு ஆற்றூரில் உள்ளது.நேற்று இரவு மணிகண்டன் பைக்கில் ஆற்றூருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். திருவட்டார் போலீஸ் நிலையம் முன்பு செல்லும்போது முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல மணிகண்டன் முயன்றார். அப்போது பஸ்சின் பக்கவாட்டில் மணி கண்டன் ஓட்டிச் சென்ற பைக் உரசியது. இதில் நிலைதடுமாறிய மணி கண்டன் கீழே விழுந்தார். கீழே விழுந்த மணிகண்டன் மீது பஸ் சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது.இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுயடுத்து பஸ்சை திருவட்டார் காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story