இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜா (46). கூலித் தொழிலாளி இவர் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 23 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதை அடுத்து அங்கிருந்து அவர்கள் வீட்டு அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முயற்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story