பூசாரி கொலை: கள்ளக்காதலி கைது

கோயில் பூசாரி கொலை வழக்கில் கள்ளக்காதலி உட்ப்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் மாரிமுத்து( 45). நேற்று முன் தினம் கோவிலுக்கு பூஜை செய்துவிட்டு வருவதாக தனது வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு முழுவதும் அவரை தேடிய குடும்பத்தார் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்று கோவில் மேடு எனும் பகுதியில் கோவில் பூசாரி மாரிமுத்து மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த பூசாரி உடலை கைப்பற்றி கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கனவனை பிரிந்து வாழ்ந்து வந்த தனலட்சுமி என்பவருக்கும் கோவில் பூசாரி மாரிமுத்துவிற்க்கும் கள்ள தொடர்ப்பு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தனலட்சுமி செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் உடனடியாக டவர் லொகேஷன் மூலம் தனலட்சுமி மற்றும் அவரோடு இருந்த உதயகுமார் என்ற இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வந்தனர். விசாரணையில் தனலட்சுமிக்கு உதயகுமாருக்கும் பூசாரி மாரிமுத்துவிற்க்கு இருந்தது போலவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பூசாரி மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி வீட்டுக்கு சென்றபோது அதே நேரத்தில் உதயக்குமாரும் வந்துள்ளார். இதனால் உதயகுமாருக்கும் பூசாரி மாரிமுத்துக்கு மாரிமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மற்றும் தனலட்சுமி பூசாரி மாரிமுத்துவை அடித்து கொலை செய்து அருகில் உள்ள வெற்றிடத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தனலட்சுமி மற்றும் உதயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story