சாராயம் விற்பனை : 3 பெண்கள் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராயம் விற்பனை : 3 பெண்கள் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பைல் படம் 

திருத்தணியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருத்தணி தாலுகா, நெமிலி மற்றும் சிவாடா பகுதியில் சிலர் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் இணைந்து, சாராயம் விற்று வந்த நெமிலி பகுதி சேர்ந்த நவபாரதி, 40, கன்னியம்மா, 58, சிவாடா காலனி சேர்ந்த ராஜா, 47, ஜெயக்குமார், 60, ஏகாத்தா, 45 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த 5 பேர் மீதும் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையம் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்களில் தலா, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள், ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். நேற்று கலெக்டர் பிரபுசங்கர் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். போலீசார் புழல் சிறையில் உள்ள அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story