கொல்லங்கோடு அருகே மது விற்பனை: ஒருவர் கைது
காவல் நிலையம்
கொல்லங்கோடு அருகே மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு தனிப்படை அமைத்து திருட்டு மது விற்பனையை தடுத்து இந்த நிலையில் கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் ஊரம்பு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது காக்கவிளை அடுத்த பிங்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story