படந்தாலூமூடு பகுதியில் சொகுசு கார் மோதல்: மூன்று ஆட்டோக்கள் சேதம்

படந்தாலூமூடு பகுதியில் சொகுசு கார் மோதல்: மூன்று ஆட்டோக்கள் சேதம்

விபத்துக்குள்ளான கார் 

படந்தாலூமூடு பகுதியில் சொகுசு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்களில் இடித்து விபத்துக்குள்ளனது.

நாகர்கோவில் - களியக்காவிளை நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் படந்தாலுமூடு பகுதியில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடியை கடந்து முன்னால் சென்ற டாரஸ் லாரியை அதிவேகத்தில் கடக்க முயலும் போது - திடீரென கட்டுபாட்டை இழந்த கார் - சாலையோர ஆட்டோ ஆட்டோ ஸ்டாண்ட்க்குள் புகுந்து - நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் மீது மோதி நின்றுள்ளது.

மூன்று ஆட்டோக்களிலும் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதுபோல கார் ஓட்டி வந்த நபர் ஒருவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தொடர்ந்து அப்பகுதியை சார்ந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து விபத்து குறித்தும் விபத்தை ஏற்படுத்தியவர் யார் எனவும் களியக்காவிளை போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Tags

Next Story