மதுரை ராமர் பாண்டியன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
![மதுரை ராமர் பாண்டியன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு மதுரை ராமர் பாண்டியன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு](https://king24x7.com/h-upload/2024/02/27/410834-1001346791.webp)
ராமர் பாண்டியன்
மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் என்ற ராமர்பாண்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி மதுரை அருகே புளியங்குளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர் என்ற ராமர்பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ராமர் என்ற ராமர்பாண்டி மற்றும் கார்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு இருசக்கர வாகனத்தில் கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர்.
அப்போது அரவக்குறிச்சி அடுத்த தடாகோவில் பிரிவு சாலை அருகே காரில் வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கொடூரமாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் ராமர் என்ற ராமர்பண்டியன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கார்த்தி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, போலீசார் மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமர் என்ற ராமர் பாண்டியர் கொலை வழக்கு தொடர்புடைய நபர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்க முடியும் என அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் ஏழு நாட்களாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து கொலையாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் சரண் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து போலீஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வழக்கின் முழு தன்மையை தெரிவிக்கவும் என ராமர் என்ற ராமர் பாண்டியனின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கடந்த ஏழு நாட்களாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த ராமர் என்ற ராமர் பாண்டியன் உடலை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் மதுரை கொண்டு செல்லப்பட்டது.
இதனால் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஏழு நாட்களாக நீடித்த அசாதாரண சூழ்நிலை தற்போது குறைந்து காணப்படுகிறது. இருந்த போதிலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பகை தீர்த்த கொலையில் வஞ்சம் தீர்த்ததால் கைது செய்யப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், உண்மையான இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.