கெரிகே பள்ளியில் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் மீட்பு

கெரிகே பள்ளியில் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் மீட்பு

மீட்கப்பட்ட ஆண் சடலம்

கெரிகே பள்ளி பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெரிகே பள்ளி கிராமப் பகுதியில் சாலையின் அருகே தண்ணீர் தொட்டி பகுதியில் ஆண் சடலம் இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் சாம்பல் பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாம்பல்பட்டியை காவல்துறையினர் சம்பவப் பகுதியில் இறந்த ஆண் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரயோத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர் மேலும் இறந்த நபர் யார் என்ற விவரங்களை சேகரித்த பொழுது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கானாங்காடு கிராமப் பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் விஜயகுமார் வயது(29) என்பது தெரிய வந்தது .

இவர் பெங்களூரு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும் சொந்த கிராமத்திற்கு செல்ல பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது அதிக மது போதையில் இருந்ததாகவும் பேருந்து ஓட்டுனர் சாமல்பட்டி என்ற பகுதியில் அவரை இறக்கி விட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

மேலும் மதுபானம் டாஸ்மாக் கடையை தேடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலும் சாமல்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story