மேல்புறத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

மேல்புறத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

மது கடத்த்தியவர்

மேல்புறத்தில் தனியார் மதுபாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மேல்புறம் சுற்று வட்டார பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குந்தத்துக்கால் நாராணி பகுதியை சேர்ந்த சனல்குமார் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 75 மது பாட்டில்கள் மற்றும் மது விற்று வைத்திருந்த ரூ.1,150 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story