குணா குகைக்குள் செல்ல முயன்ற இளைஞர்கள் கைது

குணா குகைக்குள் செல்ல முயன்ற இளைஞர்கள் கைது

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 

கொடைக்கானல் குணா குகை சுற்றுலாத்தில் உள்ள‌ பாதுகாப்பு வேலிகளை தாண்டி குகைக்குள் செல்ல‌ முய‌ன்ற‌ 3 இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக குணா குகை சுற்றுலா தலம் உள்ளது, இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுமால் பாய்ஸ் என்ற மலையாளம் படம் படம்பிடிக்கப்பட்டு,கடந்த சில வாரங்களுக்கு முன்பு படம் வெளியாகி பெறும் வெற்றி பெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக இணைந்து உரிய‌ அனும‌தியின்றி குணா குகைக்குள் சென்று கண்டு ரசிக்கும் நிலையில்,உடன் வந்த நண்பர் ஒருவர் குகைக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடும் நிலையில், உடன் வ‌ந்த‌ நண்பர் ஒருவ‌ர் குகைக்குள் இறங்கி மீட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது,

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியான சில நாட்களாக குணா குகைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது அதிகரித்தே காணப்படுகிறது, இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாரத்(24) ம‌ற்றும் விஜய்(24) ஆகிய இரண்டு இளைஞர்கள் ம‌ற்றும் சேலத்தை சேர்ந்த ரஞ்சித்(24) உள்ளிட்ட மூவரும் குணாகுகை ப‌குதியில் அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பாதுகாப்பு வேலியை அத்துமீறி தாண்டி சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்,

மேலும் குணாகுகை உட்புற‌ ப‌குதிக்கும் செல்ல‌ முய‌ன்றதாகவும் கூற‌ப்ப‌டுகின்ற‌து, இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனா இந்த‌ப்ப‌குதியில் திடீரென‌ ரோந்து பணியில் ஈடுபட்டபோது குகைப்ப‌குதிக்குள் செல்ல‌ முய‌ன்ற‌ மூவ‌ரையும் பார்த்து அதிர்ச்சிய‌டைந்த‌துட‌ன் அவ‌ர்க‌ளை பாதுகாப்பாக‌வும், ப‌த்திர‌மாகவும் வனத்துறை அலுவலக‌த்திற்கு அழைத்து வந்து எத‌ற்காக‌ க‌ம்பி வேலியை தாண்டி குகைப்பகுதிக்கு மூவரும் சென்ற‌ன‌ர் என‌ விசாரணை செய்த‌ நிலையில் வ‌ன‌ச்ச‌ட்ட‌ம் ம‌ற்றும் வ‌ன‌ உயிரின‌ பாதுகாப்புச‌ட்ட‌த்தின் கீழ் மூன்று இளைஞ‌ர்க‌ளும் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

Tags

Next Story