கல்லணைக் கால்வாய் ஆற்றில் குதித்து மகள் தற்கொலை

கல்லணைக் கால்வாய் ஆற்றில் குதித்து மகள் தற்கொலை
தாய் மகள் தற்கொலை
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாய் ஆற்றில், தாயும், மகளும் இடுப்பில் சுடிதார் துப்பட்டாவை கட்டிக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் மழை நீர் பவானிசாகர் ஆற்றில் பெருக்கெடுத்து வருகிறது. இந்த தண்ணீ்ர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் பிரித்து அனுப்பபடுகிறது. நேற்று காலை நிலவரப்படி கல்லணைக் கால்வாயில் வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் விடப்படுவதால், தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூர் பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இரண்டு பெண் சடலங்கள் ஒன்றாக மிதந்து வருவதை பார்த்த பொதுமக்கள், அந்த சடலங்களை மீட்டு கரையில் சேர்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தஞ்சாவூர் தாலுகா போலீஸார் இரண்டு சடலங்களையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் விசாரித்த போது, தஞ்சாவூர் விளார் சாலை, தில்லைநகர் லெனின் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி பத்மஜோதி(38), என்பதும், அவரது இளைய மகள் தீபிகா(15) என்பதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக செந்தில்குமாரை விட்டு பிரிந்து பத்மஜோதி இளைய மகளுடன் தஞ்சாவூரிலும், செந்தில்குமாரும் அவரது மூத்த மகள் பூர்விகா(17) வும் திருவாரூரில் வசிப்பதும், வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால், தாயும் மகளும் சுடிதார் துப்பட்டாவை இடிப்பில் கட்டிக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story