கருங்கல் பேருந்து நிலைய காம்பவுண்ட் சுவரை இடித்த மர்ம நபர்கள்

கருங்கல் பேருந்து நிலைய காம்பவுண்ட் சுவரை இடித்த மர்ம நபர்கள்

மரம்நபர்கள் உடைத்த சுவர்

கருங்கல் பேருந்து நிலையத்தில் காம்பவுண்ட் சுவரை இடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுக்கடை சந்திப்பு பகுதியில் அரசு பஸ் நிலையம் உள்ளது.மார்த்தாண்டம் - தேங்காப்பட்டணம் சாலையில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையம் பழைய சந்தையாக செயல் பட்ட பகுதி ஆகும். நூற்றுக்கணக்கான குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் புதுக்கடையில் வந்து பஸ் ஏறுவதால் அதிக மக்கள் கூட்டம் இருந்தது.

ஆகவே புதுக்கடையில் பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2004 ஆம் ஆண்டு பஸ் நிலையம் கட்டி திறப்பு விழா காணப்பட்டது.திறப்பு விழாவின் போது பஸ் நிலைய முன் பகுதியில் பெயர் பலகையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று யாரோ மர்மநபர்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் முன் பகுதி சுவரை பெயர் பலகையோடு உடைத்து போட்டுள்ளனர். இதுகுறித்து புதுக்கடை பேரூராட்சி செயல் அலுவலர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். காம்பவுண்ட் சுவர் உடைப்பு சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story