தொழிலாளி கொலை வழக்கில்  5 பேருக்கு ஆயுள்

தொழிலாளி கொலை வழக்கில்  5 பேருக்கு ஆயுள்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 
பூதப்பாண்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டுவிளையை சேர்ந்த நேசமணி ஏன்பவரது மகன் முத்துராஜ் (34)தொழிலாளி, இவரது பெரியப்பா ஞானசிகாமணியின் மகன்கள் செல்வன்(33), செல்வசிங்(32) நேசமணிக்கும், ஞானசிகாமணிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சொத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்நேரத்தில் முத்துராஜ் தனது பெரியப்பாவை தாக்கியதாக கூறப்படகிறது.

மறுநாளான ஆகஸ்டு 29ந் தேதி முத்துராஜ் தனது தோட்டத்துக்கு சென்று விட்டு மாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். முக்கடல் ஆசிரமம் ஆருகே வந்தபோது, செல்வன், செல்வசிங் மற்றும் அவர்களது நண்பர்கள் வாழையத்துவையலைச் சேர்ந்த சுரேஷ்(32), அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த ரஷீத்(23), துரை(28) உட்பட ஆகியோர் சேர்ந்து முத்துராஜை வழிமறித்து ஆரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து முத்துராஜின் மைத்துனர் ரவி அளித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வன், செல்வசிங் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் ஆமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய், சகோதரர்களான செல்வன், செல்வசிங் மற்றும் சுரேஷ், ரஷீத்(23), துரை(28) ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆபராதமாக தலா ரூ. 5 ஆயிரமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் ஆரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் மதியழகன் ஆஜரானார்.

Tags

Next Story