திம்பம் மலைப்பாதையில் பைக் மீது வேன் மோதி ஒருவர் பலி
பலியானவர்
திம்பம் மலைப்பாதையில் பைக் மீது வேன் மோதியதில் ஒருவர் பலியானர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்த மகாதேவசாமி இவர் பவானிசாகர் வாட்டர் போர்ட்டில் எலெக்ரிசியனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று தனது ஊருக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுள்ளார்.
அப்போது எதிரே கொள்ளேகாலில் இருந்து சத்திக்கு ஈச்சர் வேண் சென்றது. வேனை உடையார் பாளையத்தைச் சேர்ந்த பிரதீப் ஓட்டி வந்துள்ளர். திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் பைக்கும் - வேணும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற மகாதேவசாமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்ற ஆசனூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமாக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆசனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story