பரமத்தி வேலூர் : போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்த 7 பேர் கைது.
கைது செய்யப்பட்டவர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவேரிக்கரையில் நீரேற்ற பகுதியில் 7 பேர் கொண்ட கும்பலை வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த கும்பலிடம் 10 போதை மாத்திரைகள், 10 போதை ஊசிகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம், 2 இருச்சக்கர வாகனம் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 7 பேரையும் வேலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பொத்தனூரை சேர்ந்த நித்தீஷ், முகமது உசேன், கோகுல்ராஜ், கூடச்சேரியை சேர்ந்த சிதம்பரம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த கர்த்திக்கேயன், செல்வம், நல்லியம்பாளையத்தை சேர்ந்த பசுபதி என்பது தெரிய வந்தது. இதில் சிதம்பரமும், பசுபதி தான் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
இருவரும் தான் நாக்பூரில் போதை மருந்துகள், போதை ஊசிகளை ஆன்லைன் மூலம் ஒரு மாத்திரை ரூ.30 க்கும் வாங்கி இங்கு ரூ.900 த்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து போதை ஊசி, போதை மாத்திரைகள், ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம், 2 இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து 7 பேரையும் கைது செய்து மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.