கேரளாவில் இருந்து மருத்துவகழிவு ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்த மக்கள்
சிறப்பிடிக்கபட்ட வாகனம்
குமரியில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு உணவு கழிவுகள் கொண்டு வரும் மறைவில் கேரளாவில் இருந்து குமரிக்கு பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த கழிவுகளை தனித்தனியாக பிரித்து வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீசியும் செல்கின்றனர்.
பிடிபடும் வாகனங்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும் அபராதம் விதித்து அனுப்புகின்றனர்.இதனால் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் குழித்துறை புதிய பாலம் அருகே உள்ள பழைய பாலத்தில் கழிவுகளுடன் மூன்று வாகனங்கள் நின்றுள்ளது.
பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கு முன்பாகவே இரு வாகனங்கள் அந்த பகுதியை விட்டு சென்றுள்ளன.பொதுமக்கள் ஒன்றிணைந்து நின்ற ஒரு வாகனத்தை சோதனை செய்யும் போது உணவு கழிவுகளுடன் கேரளாவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளும், மருத்துவ கழிவுகளும் தனித்தனியாக கட்டி வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளித்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றும் வருகிறது.