சடலத்தை வைத்து மறியல் போராட்டம்

சடலத்தை வைத்து மறியல் போராட்டம்

சடலத்தை வைத்து மறியல் போராட்டம்

சடலத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகனூர் கிராமப் பகுதியில் ஏற்கனவே சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்படாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் நாகனூர் கிராம பகுதியில் சூரன் என்பவரது மனைவி சந்திரா(65) என்பவர் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய இடம் தெரியாமல் தவித்த இப்பகுதி மக்கள் சடலத்தை அடக்கம் செய்யும் வாகனத்தில் எடுத்து வந்து ஊர் மத்திய பகுதியில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த கல்லாவி காவல்துறையினர் இவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தை சமாதானப்படுத்த முடியாத நிலையில் வட்டாட்சியர் திருமலை ராஜன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து விவரங்களை எடுத்துக் கூறினார் இதனை ஏற்றுக் கொள்ளாத இப்பகுதி இப்பகுதி மக்களை நேரில் சந்திக்க கோட்டாட்சியர் பாபு நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இப்பகுதி மக்கள் தங்களுக்கு தகுந்த இடம் அமைத்து தர வேண்டுமென கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாற்று இடம் பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவப் பகுதியில் ஏ டி எஸ் பி விவேகானந்தன், டிஎஸ்பி ரவிக்குமார், வட்டாட்சியர் திருமலை ராஜன், BDO சிவப்பிரகாசம், காவல் ஆய்வாளர் தமிழரசி, காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பு மாலை 7 மணி வரையிலும் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story