லாரி டிரைவரிடம் பணம் நகை பறித்த மர்ம நபர்கள் போலீஸ் விசாரணை

லாரி டிரைவரிடம் பணம் நகை பறித்த மர்ம நபர்கள் போலீஸ் விசாரணை

சங்ககிரி அருகே லாரி டிரைவரிடம் பணம் நகை பறித்த மர்ம நபர்கள் போலீஸ் விசாரணை

சங்ககிரி அருகே லாரி டிரைவரிடம் பணம் நகை பறித்த மர்ம நபர்கள் போலீஸ் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மல்லாபுரத்தை சேர்ந்த சின்னசாமி (வயது35) என்பவர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மல்லாபுரத்தில் இருந்து தனது லாரியில் கோவை நீலாம்பூருக்கு செங்கல் லோடு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த லாரியில் செங்கல் லோடுகளை இறக்குவதற்காக மல்லாபுரம் பகுதியை சேர்ந்த மணிமேகலை, சங்கீதா, ஜெயா, மகேஸ்வரி ஆகிய பெண் தொழிலாளர்களும் சென்றனர். சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக சின்னசாமி லாரியை நிறுத்தினார். அப்போது 4 மர்ம நபர்கள் டீ-சர்ட் மற்றும் டவுசர் அணிந்து கொண்டு வந்து சின்னசாமியை மிரட்டி பஸ் நிறுத்தத்தில் படுக்க வைத்தனர். பின்னர் சின்னசாமியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 30 கிராம் நகையை பறித்து கொண்டனர். இதையடுத்து லாரியில் இருந்த 4 பெண்களிடம் தலா 3/4பவுன் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து சின்னசாமி சங்ககிரி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story