போலீஸ் சிறப்பு வேட்டை - சட்டவிரோத மது விற்ற 57 பேர் கைது

போலீஸ் சிறப்பு வேட்டை - சட்டவிரோத மது விற்ற 57 பேர் கைது

கைது 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்கள் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது. சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 57 நபர்கள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து சுமார் 2615 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 கிலோகிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, கடத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த தகவல்களை 84384 56100 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு மாவட்டக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story