பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிப்பு

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிப்பு
நீதிமன்றம்
பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் இரண்டு லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 16 ஆம் தேதி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

ஏப்ரல் 24ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மூன்று பேரில் முருகன், கருப்பசாமி இருவரும் 10 மாதங்கள் மற்றும் நிர்மலா தேவி 11 மாதங்கள் சிறைவாசத்திற்கு பின் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

2018 ஜூலை - 13ம் தேதி அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 1160 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸ் சார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் மேலும் 2018 செப்டம்பர் 7 ம் தேதி இரண்டாவது கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர் மொத்தமாக 3 பேருக்கு எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ்வழக்கின் எதிரிகளாக கருதப்படும் பேராசிரியை நிர்மலாதேவி உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும், வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள்,

பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் என சுமார் 104 பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது . இது குறித்து வழக்கு விசாரணை நிறைவுபெற்று நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முதல் குற்றவாளி பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார். பின்பு நேற்று மதியம் தீர்ப்பிற்கு பின்பு நடைபெற்ற வாதத்தில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் சுரேஷ் நெபோலியன் தீர்ப்பு சொல்லிய நாள் அன்றே தண்டனையை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மேலும் குற்றம் சாட்டப்பட்ட 5 பிரிவுகளை குறைத்து, தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் நிர்மலாதேவி வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் நீதிபதி பகவதி அம்மாள் இன்றைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதன் பின்பு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவி மதுரை மத்திய சிறை அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

நிர்மலா தேவியின் தண்டனை குறித்து வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதத்தை முன்வைத்தனர்.தண்டனையை குறைத்து வழங்க கூடாது என அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். நிர்மலாதேவியின் வழக்கறிஞர் தண்டனையை குறைப்பது குறித்து வாதம் செய்தார்.

இருதரப்பு வாதமும் நிறைவு பெற்ற நிலையில் இரு தரப்பு வாதத்தையும் நீதிபதி ஆராய்ந்து பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 வருடம் கருங்காவல் தண்டனையும் இரண்டு லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story