இளம் பெண் பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் ஆன ஆயுதப்படை காவலர் கைது !!

இளம் பெண் பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் ஆன ஆயுதப்படை காவலர் கைது !!

Rape  young woman

தென்சென்னையைச் சேர்ந்த இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். இளம்பெண் வீட்டுக்குச் சென்ற பிறகு காக்கி நிற பேண்ட் அணிந்தவர், கதவை தட்டியுள்ளார். கதவைத் திறந்த பெண்ணிடம் தன்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் எனக் கூறிய அந்த நபர், உன்னைப்பற்றிய முழு விவரம் எனக்குத் தெரியும்.

உன்னை பாலியல் வழக்கில் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல போகிறேன் என அந்த நபர் மிரட்டியிருக்கிறார். அதைக்கேட்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.காக்கி நிற பேண்ட் அணிந்தவர் உன்னை கைது செய்யாமலிருக்க ஒரு லட்சம் ரூபாய் கொடு என தெரிவித்துள்ளார். அதனால் பயந்து போன பெண் தன்னிடமிருந்த 50,000 ரூபாயை கொடுத்திருக்கிறார் மீதமுள்ள பணத்தை ஏ.டி.எம்.மில் எடுத்துவரும்படி அந்த பெண் தன்னுடைய கணவரிடம் கூறியிருக்கிறார்.

கணவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய காக்கி நிற பேண்ட் அணிந்தவர், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பெண்ணின் கணவர், 15000 ரூபாயை காக்கி நிற பேண்ட் அணிந்தவரிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து காக்கி நிற பேண்ட் அணிந்தவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் கணவரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் பாபுஷா என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றியதும் தற்போது சஸ்பெண்ட் ஆனதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு பாபுஷாவை போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story