டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறி கொள்ளை

டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறி கொள்ளை

டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறி கொள்ளை

டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறி கொள்ளை
திருச்செங்கோட்டை அடுத்த மோளிய பள்ளியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தேவனாங்குறிச்சி பகுதியில் உள்ள 6002என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் விற்பனையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல் பத்து மணிக்கு விற்பனை முடிந்தவுடன் கடையை அடைத்து விட்டு 94 ஆயிரம் ரூபாய் பணத்த்தை தனதுகைப்பையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நாமக்கல் ரோட்டில் உள்ள உலகப்பம்பாளையம் அரசினர் பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீர் என எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வண்டியை வழிமறித்து தடுத்துள்ளனர். இதில் நிலை தடுமாறி மாதிரி கீழே விழுந்த சக்திவேலை ஒருவர் பிடித்துக் கொள்ள, கையில் இருந்த பணப்பையை ஒருவர் பிடுங்க ஒருவர் மோட்டார் சைக்கிளை ஆன் செய்தபடியே வண்டியில் அமர்ந்துள்ளார். பணப்பையை தர மறுத்த போது அவனை குத்தி விட்டு பணப்பையை பிடுங்குகடா என மோட்டார் சைக்கிளில் இருந்தவர் கூற ஒருவர் கையில் கத்தியால் குத்தி மண்டையில் தாக்கிவிட்டு பணப்பையை பிடுங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளார். மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்படும் போது மோட்டார் சைக்கிளை இழுத்துப் பிடித்து சக்திவேல் தடுக்க முயற்சித்தும் முடியவில்லை. மூன்று பேரும் தப்பி ஓடிய நிலையில் கையில் ரத்த காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வந்த சக்திவேல் சம்பவம் குறித்து ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த ஊரக காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் ஒரே ஒரு இடத்தில் சிசிடிவி இருப்பதும் அதுவும் வேலை செய்யவில்லை என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story