ரவுடி படப்பை குணா குண்டர் சட்டத்தில் கைது

ரவுடி படப்பை குணா குண்டர் சட்டத்தில் கைது

படப்பை குணா

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா என்ற குணசேகரன், 44. இவர் மீது 56 வழக்குகள் உள்ளன. மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, சிறப்பு காவல் படையினர் குணாவை வலை வீசி தேடினர்.

இதையடுத்து குணா, ஜன., 24ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின், ஜாமினில் வெளிவந்த அவர், பா.ஜ.,வில் இணைந்ததும், காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில், இம்மாதம் 4ம் தேதி, சுங்குவார்சத்திரம் போலீசார் குணாவை கைது செய்து, பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சுதாகர் பரிந்துரையின்படி, படப்பை குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று உத்தரவிட்டார். அதன்படி, குணா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story