ரூ.100 கோடி நகை மோசடி வழக்கு - பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ரூ.100 கோடி நகை மோசடி வழக்கு - பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

பைல் படம் 

சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் ரூ.100 மோசடி செய்த நகை கடை அதிபரின் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், திருச்சி உள்பட 11 மாவட்டங்களில் எஸ்.வி.எஸ். என்ற பெயரில் நகைக்கடை வைத்திருந்தார். அவர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததால் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடையை பூட்டிவிட்டு நகை, பணத்துடன் சபரி சங்கர் தலைமறைவானார்.

அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் அடிப்படையில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த 2 மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரே வழக்காக இணைத்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, எஸ்.வி.எஸ். நகைக்கடை நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் அனைத்து அசல் ஆவணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story