அடகு கடையில் ரூ.4 கோடி நகை மோசடி - மேலாளரிடம் போலீசார் விசாரணை

அடகு கடையில் ரூ.4 கோடி நகை மோசடி - மேலாளரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் அடகு கடையில் ரூ.4 கோடி நகை மோசடி - மேலாளரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் அடகு கடையில் ரூ.4 கோடி நகை மோசடி - மேலாளரிடம் போலீசார் விசாரணை
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 68). இவர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கடந்த 5 வருடங்களாக 3 அடகு கடைகள் நடத்தி வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் 3 கடைகளில் உள்ள நகைகள் சரி பார்க்கப்பட்டபோது 10¾ கிலோ நகைகள் இருப்பு குறைவாக இருப்பது தெரிந்தது. எனவே கடை மேலாளர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த நந்தகோபால் (33) என்பவர் மீது சந்தேகம் உள்ளது. எனவே அவரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்து கடை மேலாளர் நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்யப்பட்டுள்ள நகை மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story