சந்தன கட்டை கடத்தல் - தம்பதி உட்பட 3 பேர் கைது

சந்தன கட்டை கடத்தல் - தம்பதி உட்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

திருப்பத்தூர் அருகே பெங்களூரில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 13.5 கிலோ சந்தனக்கட்டை கடத்தி வந்த கணவன் மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடி அடுத்த இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த முனிசாமி மகன் காளியப்பன் (55) இவருடைய மனைவி பெரியபாப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் மாணிக்கம் (55) ஆக மூன்று பேரும் கர்நாடகாவில் மேஸ்திரி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான 13.5 கிலோ சந்தனக்கட்டையை துண்டு துண்டாக உடைத்து கட்ட பையில் போட்டு கடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வெங்களாபுரம் பகுதியில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது மூவரும் கொண்டு வந்த கட்டைப்பையை சோதனை செய்ததில் சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக இருவரையும் காவல் நிலையம் வைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூன்று பேரையும் அதேபோல் கடத்தி வந்த சந்தனக்கட்டையும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story