சேட்டிலைட் போன் பயன்பாடு - 3 பேர் கைது

சேட்டிலைட் போன் பயன்பாடு  - 3 பேர் கைது
பைல் படம்
வள்ளவிளையில் சேட்டிலைட் போன் பயன்படுத்தப்படுவதாக ராணுவ உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து சேட்டிலைட் போன் பயன்டுத்திய 3 மீன்பிடித் தொழிலாளிகளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு சேட்டிலைட் போணிலிருந்து தூண்டில் உட்பட சில மீன்பிடி உபகரணங்கள் பெயர் பதித்து, அது விற்பனைக்கு உள்ளது என்று ஒரு மெசேஜ் வெளியானது. இந்த மெசேஜ் ராணுவ உளவு பிரிவு சிக்னலில் தெரிந்து உள்ளது. இதையடுத்து உளவுத்துறையினர் வள்ளவிளை கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேட்டிலைட் போன் வைத்திருப்பவர் ஒரு மீன்பிடி தொழிலாளி என தெரிய வந்தது. கொல்லங்கோடு போலீசார் சம்பந்தப்பட்டவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவருக்கு சேட்டிலைட் போன் கொடுத்தது பூத்துறை பகுதி சேர்ந்த மற்றொரு மீனவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குமரி கேரளா எல்லை பகுதி பொழியூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் கொடுத்ததாக கூறினார். போலீசார் கேரளப் பகுதியில் உள்ள பிரவீன் என்ற நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் பிரபின் துபாயில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தபோது, சேட்டிலைட் போன் வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்துறை பகுதியில் உள்ள மீன் பிடி தொழிலாளி ஒருவருக்கு விற்பனை செய்ததும், தற்போது அந்த போன் செயல்பட தொடங்கியதால் வெளிநாட்டில் மீன் பிடிக்கும் தூண்டில், வலை போன்றவை வேண்டுமா என்று மெசேஜ் அனுப்பினேன் என்று கூறினார். போலீசார் சம்பந்தப்பட்ட மூன்று பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story