பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்

பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்

மாணவர்கள் மாயம்

தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளிக்குப்போக மனமில்லாமல் இரண்டு பள்ளி மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிஷான் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (46) இவருக்கு சுரேந்திரா (16) மற்றும் ராகேஷ் (14) என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த சில நாட்களாகவே இவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்திற்கு போக விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல சுப்பிரமணி மகன்கள் இருவரையும் பள்ளிக்கூடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். அப்போது இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி இருவரையும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து சுப்பிரமணி தனது மகன்கள் இருவரையும் கண்டுபிடித்து தருமாறு தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அண்ணன் தம்பியான 2 பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story