நாகர்கோவிலில் பள்ளிமாணவிக்கு பாலியல் தொல்லை

file

கோப்பு படம்


நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார். இதனை கண்ட பொதுமக்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story