சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : முதியவர்களுக்கு இரட்டை ஆயுள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (65), முருகன் (60) இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச்.16 ஆம் தேதி சிறுமிகள் இருவரும் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு வந்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமிகளிடம் விசாரித்தனர். இதில், சிறுமிகள் இருவருக்கும், முருகன், செல்வம் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. பிறகு சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த மார்ச,17 ஆம் தேதி செல்வம், முருகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், முதியவர்கள் செல்வம், முருகன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 4 லட்சம் ரூபாய் அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.