கூட்டு பலாத்காரம் - அதிமுக நிர்வாகி மகன் உட்பட 7 பேர் போக்ஸோவில் கைது
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அவரது தயாருடன் கடந்த 9ம் தேதி இரவு வெள்ளகோவில், வீரக்குமாரசாமி கோவில் தேர்த்திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின் இரவு நேர கலை நிகழ்ச்சிகளை சிறுமி அவரது தோழியுடன் பார்த்து கொண்டிருந்த நிலையில் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின் நள்ளிரவு ஆன நிலையில் மகள் வராததால் மீண்டும் கோவிலுக்கு வந்து விசாரிக்கையில், சிறுமியை 2 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் கூட்டி சென்றதாகவும், பின் காட்டு பகுதியில் உள்ள அறையில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.பின்பு 2 பேரில் ஒருவன் மட்டும் சிறுமியை வீட்டில் விட சென்ற போது வாகனத்தை வழி மறித்த மற்றொரு 2 பேர் காரில் கடத்தி பலாத்காரம் செய்துள்ளது.
பின் இந்த 2 பேரும் மற்றொரு காரில் வந்த 2 பேரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். பின்பு அவர்களும் பாலியல் ரீதியாக துன்பறுத்திய பின்னர் நேற்று முன் தினம் விடியற்காலை சிறுமியை வீட்டிற்கு அருகே விட்டு சென்றுள்ளனர். பின்னர் சிறுமியிடம் அவரது பெற்றோர் மாயமானது குறித்து விசாரிக்கையில், 3 கும்பல்களை சேர்ந்த 6 பேர் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அணைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் (32), செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (27), வெள்ளகோவில், பாரதிநகரை சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28), வெள்ளகோவில், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளகோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (30) ஆகிய 5 பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்கைது செய்தது. அவர்கள் 5 பேரும் திருப்பூர் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதில் கைது செய்யப்பட்ட தினேஷ் என்பவரின் தந்தை கதிர்வேல்சாமி அதிமுக கிளை செயலாளர் எனவும், அவரது மகன் தினேஷ் மூலனூர் அதிமுகவில் ஐடி விங் பிரிவில் பதவி கேட்டுள்ளதாக உள்ளதாக தெரிகிறது.முதலில் சிறுமியை கடத்தி சென்ற மணிகண்டன் மற்றும் பிரபாகரை மிரட்டி தினேஷ் தலைமையில் கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஜெ என எழுதப்பட்ட கார் உள்பட 2 கார்கள்,2 டூவீலர் உள்பட 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.