திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பசை வடிவ தங்கம் 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.28.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. அதில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கம்போல் சோதனை செய்தனா். இதில் ஆண் பயணி ஒருவா், தனது காலணியில் மறைத்து பசை வடிவிலான 401 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 28.85 லட்சமாகும்.

Tags

Next Story