காபி பவுடர், பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்

காபி பவுடர், பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 17 லட்சத்து 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடைமைகளில் காபி மேட் பவுடர் மற்றும் குழந்தை விளையாட்டு பொம்மைகளில் 273.5 கிராம் தங்கத்தை நூதன முறையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட ரூ. 17 லட்சத்து 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மைகள், சூட்கேஸ், உடைமைகள் போன்ற பொருட்களில் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து வருவது திருச்சி விமான நிலையத்தில் என்ன தான் நடக்கிறது என்று கேள்விக்குறியாக்கி வருகிறது.

Tags

Next Story