கடல் அட்டைகள் கடத்தல் - 150 கிலோ பறிமுதல், டிரைவர் கைது

கடல் அட்டைகள் கடத்தல் - 150 கிலோ பறிமுதல், டிரைவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் 

தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் கடத்திய 150 கிலோ கடல் அட்டைகளை மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பக வனத் துறையினா் பறிமுதல் செய்து, டிரைவரைக் கைது செய்தனா்.
மன்னாா் வளைகுடா உயிா்கோளக் காப்பக வனத் துறை சிறப்புப் படை வனவா் நந்தகுமாா், வனக் காப்பாளா் சுதாகா் ஆகியோா் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே நேற்று ரோந்து சென்றனா். அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த வினோஜ்குமாா் (33) என்பவரிடம் நடத்திய விசாரணையில், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவரை வனத்துறையினா் கைது செய்து, சரக்கு ஆட்டோ, கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்து, வனச் சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

Tags

Next Story