பெற்ற தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த மகன் கைது

பெற்ற தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த மகன் கைது

ஜெயின்

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் பெற்ற தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானதீபம் மனைவி குடோடிடல்டா(66). கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது 3வது மகனான ஜெயின், அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

ஜெயின், அடிக்கடி தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தாய் குடோடில்டா தனியாக வீட்டில் இருந்தபோது மது போதையில் சென்ற ஜெயின் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஜெயின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குடோடில்டாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குடோடில்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வடபாகம் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் போலீஸார் தப்பியோடிய ஜெயினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி செல்சினி காலனியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் தகராறு செய்த தந்தையை 15 வயது சிறுவன் வெட்டிக் காெலை செய்தார். இந்நிலையில பெற்ற தாயை மது போதையில் மகன் குத்திக் கொலை செய்துள்ளார். தூத்துக்குடியில் தொடர் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story