தண்டவாளத்தில் கற்கள் - ரயிலை கவிழ்க்க சதி?

பார்வதிபுரம் ரயில்வே மேம்பால தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் காந்திதாமிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9:00 மணிக்கு குமரி மாவட்டம் நாகர்கோவிலை நெருங்கியது. பார்வதிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, தண்டவாளத்தில் பெரிய பெரிய கற்கள் அடுக்கி வைத்திருந்ததை டிரைவர் பார்த்து விட்டார். இதனால் சுதாரித்துக் கொண்டு டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை மெதுவாக இயக்கினார். எனினும் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி ரயில் நின்றது.

இது சம்பந்தமாக ரயிலை நிறுத்திவிட்டு ரயில்வே போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை நோக்கி சென்றது. இதற்கிடையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தண்டவளத்தில் எலும்பு கூடான மாட்டின் தலை, கொம்பு மற்றும் ஆறு பெரிய கற்களும் உடைந்த நிலையில் கடந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.

இது சம்பந்தமான விசாரணையில், ரயிலை கவிழ்க்க சதி செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள காட்சி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags

Next Story