ஊட்டியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளர் கைது

ஊட்டியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளர் கைது

கோப்பு படம் 

ஊட்டியில் 15 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின் 15 வயது மகன் ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அந்த மாணவன் பள்ளி விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக 15 வயது பள்ளி மாணவன் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர்டிசில்வா அந்த மாணவனை கட்டிப்பிடித்துள்ளார்.

மேலும் அலிஸ்டர்டிசில்வா, அந்த மாணவனின் உள்ளாடைக்குள் கையை விட்டு அந்தரங்க பகுதிகளை தொட்டு பார்த்துள்ளார். அப்போது அலிஸ்டர்டிசில்வா, மாணவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவன் தனது தோழியிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருடைய தோழியின் பெற்றோர் மூலம் இந்த தகவல் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கும், 15 வயது பள்ளி மாணவனின் பெற்றோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி அலிஸ்டர்டிசில்வாவை பணி நீக்கம் செய்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி ஏ.டி.எஸ்.பி., யசோதா உத்தரவின் பேரில், ஊட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அலிஸ்டர்டிசில்வாவை கைது செய்தனர்.

Tags

Next Story