ரயில் முன் பாய்ந்து தற்கொலை - 5 பேர் உயிரிழப்பு

ரயில் முன் பாய்ந்து தற்கொலை - 5 பேர் உயிரிழப்பு
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கும்பகோணம் பகுதியில் இரு வேறு இடத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உட்பட 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42) இவர் கோவை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் வங்கியில் வேலை செய்து வரும் ஆர்த்தி (வயது 40) தனது மகள்கள் ஆருத்ரா (11), சுபத்ரா (7) ஆகியவருடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் தோழி வீட்டிற்கு சென்று வருவதாக ஸ்கூட்டியில் சென்றவர் தனது இரு மகள்களுடன் சுந்தர பெருமாள் கோவில் உத்தாணி அருகே கண்களில் துணியை கட்டிக்கொண்டு மகள்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின் பேரில் இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதேபோல் திருவிடைமருதூர் கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரேவதி (வயது 50) இவரது மகள் மகேஸ்வரி (வயது 30) ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிடைமருதூர் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கு சென்று வந்த விரைவு ரயில் முன் இருவரும் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கும்பகோணம் இருப்பு பாதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story