மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் - போலீசார் விசாரணை

மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் - போலீசார் விசாரணை

மூதாட்டிகளை ஏமாற்றி நகை அபேஸ் செய்த வாலிபர் - போலீசார் விசாரணை

மூதாட்டிகளை ஏமாற்றி நகை அபேஸ் செய்த வாலிபர் - போலீசார் விசாரணை
சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் வயதான மூதாட்டிகளை திசை திருப்பி நகைகளை மர்மநபர்கள் திருடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. அவர்கள் தாங்கள் போலீஸ் என்றும், இவ்வளவு நகைகளை அணிந்திருக்ககூடாது எனவும் கூறி நகைகளை நூதனமாக பறித்துச் செல்கின்றனர். அவ்வாறு நாமக்கல்லில் மூதாட்டிகளை திசை. திருப்பி நகைகளை பறித்து சென்றதாக மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சித்திரைவேல் (41) என்பவரை நாமக்கல் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர் சேலம் அரசு மருத்துவமனையிலும் மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவரை போலீசார் இன்று காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story