பைக் விபத்தில் வாலிபர் பலி: சிகிச்சையில் இருந்த நண்பரும் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி: சிகிச்சையில் இருந்த நண்பரும் பலி

பலியான இளைஞர்

அண்டுகோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் முன் நாய் குறுக்கே பாய்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் இருந்த நண்பரும் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம்திருவட்டாறு அருகே உள்ள செங்கோடி பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகன் டேனியல். இவரது நண்பர் கடையால்மூடு பகுதியை சேர்ந்த அணி குட்டன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர் களுடன் சம்பவத்தன்று நள்ளிரவில் கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழாவிற்கு பைக்கில் சென்றனர். பின் அங்கிருந்து டேனியலும், அணி குட்டனும் பைக்கில்ஊருக்கு புறப்பட்டனர்.

அண்டுகோடு பகுதியில் வந்தபோது நாய் குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் பைக் நிலை தடுமாறி அருகில் உள்ள ஓடையில் விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி டேனியல் பரிதாபமாக இறந்தார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த அணி குட்டன் இன்று உயிரிழந்தார்.

Tags

Next Story