சாரை பாம்பு வறுவல் - சொந்த காசில் சூனியம்

சாரை பாம்பு வறுவல் - சொந்த காசில் சூனியம்
வாலிபர் பதிவு செய்த வீடியோ காட்சி 
திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு கிராமத்தில் சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார், பாம்பை சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30) இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வானவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டு பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது.இதன் காரணமாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story