சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியில் சிலர் பதுங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அஸ்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஜான்சன்பேட்டை சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஜான்சன்பேட்டையை சேர்ந்த ரவிசங்கர் என்கிற விஜி (வயது 32) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story