கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

குமரி மாவட்ட  மருத்துவ மாணவி சீனாவில் உயிரிழப்பு

சேலம் அருகே கார் மோதி வாலிபர் பலி
சேலம் அமானி கொண்டலாம்பட்டி அரசமரத்து காட்டுப்பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் சுரேஷ் (38) இவர் சற்று மனநலம் பாதிக்கபட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் நேற்று கொண்டலாம்பட்டி பைபாஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story