திண்டிவனத்தில் போதை மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் கைது

திண்டிவனத்தில் போதை மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் கைது

 நவீன்,சூர்யா,பிரவீன் ராஜ் ,ரஞ்சித் குமார்

திண்டிவனத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களின் கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புதுச்சேரி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீ சார், அந்த பகுதிக்கு சென்று. தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை மடக்கி பிடித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில், 100 கிராம்கஞ்சா, டிஸ்டில் வாட்டர், 20 போதை மாத்திரைகள், மளசிகள் ஆகியன இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர், அதில் திண்டிவனம் செஞ்சி ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த குபேந்திரன் மகன் நவீன் (வயது 26), ஜெயபுரம் சின்ன தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் சூர்யா (19), அண்ணாநகர் மன்னார்சாமி கோவில் பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன் பிரவீன் ராஜ்(26), சர்க்கார் தோப்பு ராம்குமார் மகன் ரஞ்சிக்கு மார்(25) என்பதும், இவர்கள் அந்தபகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story