தஞ்சாவூர் : மூட்டை மூட்டையாக குட்கா, தட்டி தூக்கிய போலீஸ்

தஞ்சாவூர் : மூட்டை மூட்டையாக குட்கா, தட்டி தூக்கிய போலீஸ்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா
தஞ்சாவூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 1000 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர், ரெத்தினசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருள் பதுக்கி வைத்து, கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை ரகசியமாக கண்காணித்தனர். இதற்கிடையில், அந்த வீட்டிற்கு வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. மேலும் , வீட்டில் ஆய்வு செய்த போது, அறைகள், . மாடி படி வாசல், கார் உள்ளிட்ட பல இடங்களில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த கெளதம்,30, வீரமணி,40, மன்னார்குடியை சேர்ந்த தினேஷ், 30, ஆகிய மூவரும் தப்பியோடினார். அவர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், வீட்டில் அடுக்கி வைத்து இருந்த ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கார், டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story