இளைஞரின் உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு ,

இளைஞரின் உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு ,
தர்மபுரி மாவட்டம் 04/12/2023 இளைஞரின் உடல் தோண்டி எடுத்து உடற் கூறு ஆய்வு , தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாதனூர் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் மகன் சுகன் (வயது 21) , கடந்த மாதம் கோயம்புத்தூர் கூலி வேலைக்கு சென்றவர். அங்கிருந்து 16 வயது இளம் பெண்ணை காதலித்து பெண்னை அவருடன் சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது , இது தொடர்பாக கோயம்புத்தூர் பகுதியில் மாணவி மாயம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஊத்துபள்ளம் பகுதிகள் இளம்பெண்ணை போலீசார் மீட்டு சென்றனர், விசாரணையில் 16 வயது இளம்பெண் என்பது தெரிய வந்தது, இதனை அடுத்து வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பயந்து சுகன் பூச்சி மருந்து குடித்து கடந்த மாதம் 8-நதேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . உறவினர்கள் உடலை தாதனூர் மயானத்தில் புதைத்தனர் . ( சுகன் இறப்பு சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலகம் கேட்க போது இறப்பு சான்றிதழ் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா அளித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவல்துறையினர் , அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரன் , பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர், வள்ளி, தடயவியல் மருத்துவத் துறை இணைந்து, சுகன் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு நடத்தினார்கள் ,

Tags

Read MoreRead Less
Next Story